புத்தசாசன கலாசார அமைச்சின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்தினால் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்று வந்த சிங்கள பேச்சு பயிற்சி பாட நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, மருதமுனை கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி ஜெனித்ரா தேவசந்திர தலைமையில் கலாசார மத்திய நிலையத்தில் (08)நடைபெற்றது.
சிங்கள பாட ஆசிரியர் எம்.ஏ.எம்.மர்சூக், கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ஹைதர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளரும் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருமான ஜெ.லியாகத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இங்கு கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களின் சிங்கள மொழி மூலமாக கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் சிறுவர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்த நிகழ்வில், ஜாஹி வீவர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஐ.உபைதுர் ரஹ்மான், சரோ பார்ம் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தொழிலதிபர் எம்.எச். எம். தாஜுதீன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சஜித், ஆகியோர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் ஜெஸ்மி எம். மூசா, லக்னி ஹேன்லூம் நிறுவனத்தின் பணிப்பாளர் என்.எம். அப்துல் அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய அரபு பீடத்தின் முன்னாள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எச்.எம்.நைறூஸ், சமூர்த்தி தலைமை பீடர் முகாமையாளர் ஏ.ஆர். எம். சாலி, பிரதி அதிபர் எம்.எம்.அனஸ் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment