தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தமது தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் - இம்ரான் எம்.பி



ஹஸ்பர் ஏ.எச்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது கல்விச் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமது தொழில் நுட்ப ஆற்றலை அதிகரிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று (26) கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நாட்டின் நாலா புறங்களையும் சேர்ந்த மாணவர்கள் வெளிவாரிப்பட்டப் படிப்புக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தம்மை பதிவு செய்துள்ளனர். இவர்களில் தொழில் புரிவோரும் உள்ளனர். தொழில் இல்லாதோரும் உள்ளனர்.

இந்த வெளிவாரி மாணவர்கள் கற்றலுக்காக வார இறுதிநாட்களில் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்படுகின்றார்கள். தொழில் புரிவோர் வாரத்தில் 5 நாட்களும் தமது தொழில் நிலையங்களுக்குச் செல்லும் அதேவேளை வார இறுதிநாட்களில் பல்கலைக்கழகத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது. தொழில் இல்லாதோர் பெரும் பணச்செலவு செய்து பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ஒரு நாள் பல்கலைக்கழக சூழலில் தங்க வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது.

இதனால் பல சிரமங்களை இந்த மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்தச் சிரமங்களால் சிலர் தமது வெளிவாரிப் பட்டப்படிப்பை கைவிட்டும் உள்ளனர்.
இந்த விடயத்தை பல மாணவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இரண்டு முன்மொழிவுகளை முன்வைத்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பினேன். ஒன்று பிராந்தியக் கற்கை நிலையங்களை ஏற்பாடு செய்வது. ஒன்லைன் வகுப்புகளை நடத்துவது மற்றொன்று.
எனினும், இந்த விடயங்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. பல பல்கலைக்கழகங்கள் தமது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒன்லைன் வகுப்புகளை நடத்தும் போது தென்கிழக்குப் பலக்லைக்கழகம் மட்டும் மாணவர்களை நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு அழைப்பதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை.

சிலவேளை நவீன தொழில்நுட்ப விடயங்களில் இப்பல்கலைக்கழக ஆற்றல் குறைவு காரணமாக இருக்குமோ என எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. அப்படி இருந்தால் அதனை வளர்த்து ஒன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து இப்பலைக்கழகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு இப்பல்கலைக்கழகம் தன்னை மாற்றிக் கொள்ளாதவிடத்து எதிர்காலத்தில் இப்பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கற்கை நெறிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும் ஆபத்து உள்ளதை சம்பந்தப்பட்டோர் விளங்கிக் கொள்வது நல்லது என  அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :