வெள்ளப் பாதிப்பிற்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு 'தாராள உள்ளங்கள் அறக்கட்டளை' அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு
அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ளப் பாதிப்பிற்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், அமைப்பின் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் திரு.சிறிஹரன், பொருளாளர் திரு.நவநீதன், மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் , கிராம சேவகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மழை வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பில் வசிக்கும் 116 குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் வெள்ள நீர் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் பெறுமதியான உணவுப் பொருட்களை அவ்வமைப்பு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த உணவு பொதியில் அரிசி ,பருப்பு ,சீனி ,பால் மா ,பிஸ்கட் , டின் மீன், நெத்தலி ,உப்பு ,தேயிலை, மிளகாய்த்தூள் ,என்பன உள்ளடங்கியுள்ளன.
0 comments :
Post a Comment