தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த அச்சு முஹம்மத் இஷாக் அவர்களின் மறைவுக்கு ஊழியர் சங்கம் தலைவர் முனாஸின் அனுதாபம்!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த அச்சு முஹம்மத் இஷாக் அவர்களின் மரணச் செய்தி எங்களை ஆழ்ந்த அனுதாபத்துக்குள்ளாக்கியுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மிக நீண்ட நாட்களாக வேந்தராக இருந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் அதன் உட்கட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழகத்தின் இதர விடயங்களில் தன்னை அர்ப்பணித்த வேந்தர் அச்சு முஹம்மது இஷாக் அவர்களின் மரணச் செய்தி கேட்டு எங்களது பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

மர்ஹும் அச்சு முஹம்மது இஷாக் அவர்கள் எமது சமூகத்துக்கும் சமூகம் சார்ந்த நலன் விடயங்களிலும் அவருடைய அர்ப்பணிப்பான மகத்தான சேவை இங்கு நினைவு கூறப்பட வேண்டியது.

அண்ணாருடைய இழப்பில் துயர் உற்றிருக்கும் அவரது மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றது.

முனாஸ் முகைடீன்
தலைவர்
ஊழியர் சங்கம்
SEUSL
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :