ஊடகவியலாளர்களுக்கு "ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு"



நூருல் ஹுதா உமர்-
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் "ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு" இன்று சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் அவர்களினால் விரிவுரை நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களின் நுண்ணறிவு விளக்கங்கள் இடம்பெற்றதுடன் விவாதங்கள் மற்றும் கேள்வி பதில் அமர்வுகளும் நடைபெற்றது

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் அதன் அழிவுகரமான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த செயலமர்வில் ஊடகவியலாளர்களின் பங்கேற்பானது போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான எங்களின் கூட்டு முயற்சிகளுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என இங்கு கருத்து தெரிவித்த தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபர் ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ராசிக் நபாயிஸ், ஏ.ஜெ.எம். இக்ராம் உட்பட ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :