சர்வதேச ரீதியில் நடைபெற்ற புதிய வானம் விருது விழாவில் மாவடிப்பள்ளி மஜினா உமறுலெவ்வை கௌரவிப்பு






எம்.எஸ்.எம்.ஸாகிர்-
புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிரீன் சேனல் கல்வி நிறுவனம் இணைந்து நடாத்திய புதிய வானம் விருது வழங்கும் விழா- 2024 ஹொரணை ரந்தாரா மண்டபத்தில் (08) தனலட்சுமி மாதவன் மற்றும் மணி ஸ்ரீகாந்தன் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ் விருதுக்கு இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் நடுவர் குழுவினரால் சில ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதன் போது மாவடிப்பள்ளி யூ.எல்.யூ. மஜினாவினைத் தெரிவு செய்து "சிறந்த பத்திரிகையாளர்" எனும் சிறப்பு விருதினை வழங்கிக் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் மற்றும் கனடாவைச் சேர்ந்த கலாநிதி நரேந்திரன் விவேகானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவிலிருந்து பல ஆளுமைகள் வருகை தந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். இலங்கையின் முன்னணி நடிகை, செய்தி வாசிப்பாளர் நிரஞ்சனி சண்முகராஜா மற்றும் பல இலங்கை, இந்திய ஆளுமைகள் நிகழ்வில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

சர்வதேச ரீதியில் பல ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்விலே, மாவடிப்பள்ளி யூ.எல்.யூ. மஜினாவுக்கு "சிறந்த பத்திரிகையாளர்" எனும் சிறப்பு விருதும், சான்றிதழும்" வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இவர் கட்டாரில் வெளிவரும் துணிந்தெழு சஞ்சிகையில் இணையாசிரியராக செயற்பட்டு வருவதோடு, இந்தியாவில் சென்னையில் வெளிவரும் மணி மகுடம் சஞ்சிகையிலும் இணையாசிரியராக செயற்படுகிறார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :