கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக மருத்துவர் சுகுணன் பதவியேற்பு



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக மருத்துவர் குணசிங்கம் சுகுணன் இன்று (4) புதன்கிழமை பதவியேற்றார்.

முன்னதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அளப்பரிய சேவையாற்றிய இவர் இடமாற்றம் பெற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவையாற்றினார்.

பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக கடமையாற்றிய இவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றினார்.

தற்போது அங்கிருந்து இடமாற்றலாகி கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு இன்று புதன்கிழமை காலை பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்வில் முன்னர் பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் ரங்க சந்ரசேன கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :