திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்னிருந்து ஆரம்பமான பிரச்சார பேரணியானது திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தினை சென்றடைந்தது...!
கிழக்கு மாகாண பிரதேச சிவில் வலையமைப்பினால் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றைய தினம் (11) திருகோணமலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற உரிமை ரீதியான பிரச்சினைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் சிங்கள ஆகிய மூவின மக்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், துறைசார் சிவில் அமைப்புக்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், விவசாயிகள், நிலத்தினை இழந்தவர்கள், மத வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டவர்கள்,மீனவர்கள், பெண்கள், சிவில் செயற்பாட்டாளர்கள மற்றும் ஊடகவியலாளர்கள்; அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.
இவ் மதனித உரிரைமகள் தினத்தின் கலந்து கொண்டவர்கள் வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு நிறுத்துங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்துங்கள், மீள நிகழாமையை உறுதிப்படுத்து, கூட்டுப்படுகொலைகளுக்கான நீதி வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கு,அரசியல் கைதிகளை விடுதலை செய், பாதிக்கப்படட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கு, மீனவர்களுக்கான நிவாரணம் வழங்கு, பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கான தீர்வினை வழங்கு. 76 வருட தேசிய இனப்பிரச்சிக்கான நிலையான அரசியல் தீர்வு வேண்டும் என முக்கியமான கோசங்களை கோரியவகையில் போரணியாக திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்னிருந்து ஆரம்பமான பிரச்சார பேரணியானது திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தினை சென்றடைந்தது.
சர்வதேச மனித உரிமை தினத்தினை ஒட்டிய பிரச்சார பேரணியானது திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தினை அடைந்ததும் கிழக்கு மாகாணத்திலுள்ள மேற்கூறிய பாதிப்புக்களைக் கொண்ட மக்கள் தங்களுக்கான பிரச்சினைகளை முன்வைக்கும் மண்டப நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வானது கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பின் தலைவர் ரெஜினோல்ட் சுதர்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியக செயலாளர் வெ. இராஜசேகர்
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் யு.ட இசைதீன் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் நிறைவேற்று சபையின் செயலாளருமான சட்டத்தரணி திருமதி.பிரசாந்தினி மயூரன், AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதி இணைப்பாளர் அழகுராசன் மதன், ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் மண்டப நிகழ்வில் மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் தற்போதும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டவர்களால் உரிய அதிகாரிகளுக்கு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு தொடர்பான மகஜர் ஒன்றும் பெண் மனித உரிமை பாதுகாவலர் செல்வி.நாகேஸ்வரன் அவர்களால் வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகள் ஊடாக மேன்மை தங்கிய சனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறுதியாக பாதிக்கப்பட்டவர்களால் ஊடக சந்திப்பு ஒன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 comments :
Post a Comment