South Eastern Social Organization னின் தலைவர் எம்.எச்.எம். ஹலிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு Duniya Melayu Duniya Islam தொண்டு நிறுவனத்தின் தலைவர் கலாநிதி யூ.ரீ. எம். அன்வர் பிரதம அதிதியாகவும் எம். முகம்மட் பியாஸ், அஷாட் ஷரீப்டீன் மற்றும் அகீலா ஷரீப்டீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டு புத்தகபைகளை வழங்கி வைத்தனர்.
மாணவர்களுடன் சரளமாக உரையாடிய குழுவினர், மொழிகளைக் கற்றுக்கொள்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதுடன் தாங்களால் திட்டமிடப்பட்டுள்ள மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களையும் உள்ளடக்கியதான கற்பித்தல் முறையை இந்த பிரதேசத்துக்கும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நாட்டில் பல்வேறு தொண்டு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் Duniya Melayu Duniya Islam தொண்டு நிறுவனம் இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தேவையுடைய மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து உரையாடியதுடன் மாணவர்களுக்கான 150 க்கு மேற்பட்ட புத்தகப்பைகளையும் வழங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment