சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் ஆங்கிலக் கலா 2024, GEM திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பாடசாலை பிரதி அதிபர் எஸ்.எம். சுஜன், இணைப்பாடத்திட்ட உதவி அதிபர் எம்.எப்.எம்.ஆர்.ஹாதிம் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் கெளரவ விருந்தினர்களாக கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி. எம்.எச்.எம். ரியாசா, சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி திருமதி. ஏ. அஸ்மா மலீக், ஆங்கில பாட இணைப்பாளர் ஏ.எல்.எம். ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக நியூ ஃபேஷன் மோட்டார்ஸின் உரிமையாளரான எம்.வை.முபாரக் அவர்கள் கலந்து கொண்டார்.
மாணவர்கள் தங்கள் மேடை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை கவர்ந்தது டன் அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றனர். நிகழ்வின் சிறப்பம்சமாக கல்முனை கல்வி வலயம் நாடளாவிய ரீதியில் சாதாரண தர பெறுபேற்றில் 02 ஆம் இடத்தைப் பெற்றதற்காக வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பாடசாலை பகுதித் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment