அக்குரணை வெள்ள அனர்த்தம், ரவுப் ஹக்கீம், தீர்வு, சட்டவிரோத கட்டிடங்கள், NPP. ஓர் பார்வை.



க்குரணை வெள்ளத்திற்கு தீர்வு காண்பதற்கு சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு இதை கூறியிருக்கலாம். ஏனெனில் அக்குரணை வெள்ள அனர்த்தத்திற்கு மு.கா தலைவர் ரவுப் ஹகீம்தான் முழுப் பொறுப்பும் என்று கடந்த தேர்தலுக்கு முன்பய சூறாவளிப் பிரச்சாரத்தினால் அவரது வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்ததும் உண்மையை பொறுப்புணர்ச்சியுடன் அமைச்சர் லால்காந்த கூறியுள்ளார்.

கடந்த பொது தேர்தலுக்கு முன்பு அக்குரணை வெள்ளம் பற்றி அரசியலுக்கு அப்பால் நடுநிலையாக ஆய்வு செய்து “”அக்குரணை வெள்ள அனர்த்தம், யார் பொறுப்பு ? ஓர் ஆய்வு”” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

அந்த கட்டுரையில், ஆறு, வாய்க்கால், நீரோடைகள் போன்றவற்றை வழிமறித்து இதுவரையில் 240 க்கு மேற்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இவைகள் திடீரென கட்டப்பட்ட கட்டிடங்களல்ல. 1998 ம் ஆண்டுக்கு முன்பிருந்து அக்குரணை பிரதேச சபையானது காலத்திற்கு காலம் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி வந்திருக்கின்றது.

இவ்வாறான சட்டவிரோத கட்டிடங்களை உடைக்க வேண்டுமென்று இப்போதுதான் அமைச்சர் லால்காந்த கூறியுள்ளார். இதே கருத்துடன் இன்னுமொரு மாற்றுத் தீர்வினையும் ரவுப் ஹக்கீம் முன்வைத்தபோது சிலர் கூச்சலிட்டனர். இந்த கூச்சலானது அரசியல் நோக்கம் கொண்டதென்று அப்பாவி மக்களினால் அப்போது புரிந்துகொள்ள முடியாத நிலையில், அமைச்சர் லால்காந்தவின் கருத்து வெளியாகியுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. ஆனால் அக்குரணையில் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு எதிராக எந்தவித விமர்சனமும் ஏற்படவில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் விமர்சித்தவர்கள் தற்போது ஆளும் தரப்பில் இருப்பதுதான் இதற்கு காரணமாகும்.

அக்குரணையில் மழை நீர் விரைவாக வழிந்தோடுவதற்கு தடையாக இருக்கின்ற சட்டவிரோத கட்டிடங்களை உடைப்பதற்கு பண முதலைகளான கட்டிட உரிமையாளர்கள் அனுமதிப்பார்களா ?

வெள்ள அனர்த்தத்தை காண்பித்து அக்குரணை மக்களின் வாக்குகளை மொத்தமாக சுவீகரித்த NPP அக்குரணையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் முன்னிப்பாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.



முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :