கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் (25) நடைபெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் என சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இரத்த நன்கொடைகளை செய்தனர்.
ஆரம்ப நிகழ்வு கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் . குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் . நடராஜா றமேஸ் கலந்து கொண்டார் விசேட அதிதியாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் டொக்டர் திருமதி பி.எம்.கவிதா கலந்து கொண்டார்.
இந்த இரத்ததான நிகழ்வில் கல்முனை கார்மேல் பற்றிமா வின் 125 ஆவது நிகழ்வு நிறைவேற்றுக் குழுவினரும் கலந்து கொண்டு ஒத்துழைத்தனர்.
இப்பாடசாலையின் .125 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் பல நிகழ்வுகள் வருடத்தில் மாதாந்தம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment