கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட கலை இலக்கிய மன்ற உறுப்பினர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்களின் வான்மையை விருத்தி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை கடந்த 2024.12.23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள சீன் மூன் கார்டன்( Sen Moon Garden Hotel ")ஹோட்டலில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையின் கீழ் மட்டக்களப்பு கலாசார உத்தியோகத்தர் ரி.மலர்ச்செல்வன், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் எ.எல் தௌபீக், தலைமைக் காரியலய கலாசார உத்தியோகத்தர் வி. குனபாலா ஆகியேர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்ற போது வளவாளர்களாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் திரு மேகராஜா அவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் அப்துல் றஸாக் அவர்களும் இச்செயல் அமர்வில் ஆக்கத்திறனுடைய விடயங்களை முன் வைத்தார்கள்
இப்பச்சி பட்டறை மூன்று அமர்வுகளாக இடம்பெற்றது கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் திரு மேகராஜா அவரின்
முதல் அமர்வு விரிவுரையின் சாராம்சம்
01.கலை படைப்புக்களை ஆவணப்படுத்துவது எவ்வாறு
02 இலக்கிய அறிவு சார் தெளிவூட்டல்களை எப்படி கையாள்வது
03 கிழக்கிலங்கையில் கலையினை ஆவணப்படுத்தலில் விபுலானந்த அவரின் முயற்சி
04 சஞ்சிகைகள் மூலம் அறிவைப் பகிர்தல் பணியில் பண்பாட்டலுவல்கள் திணைகளம் "யுக்த்தி" சஞ்சிகைவெளியிட்டு வருகிறது
06 இலக்கிய அறிவு சார்ந்த தெளிவூட்டல் மற்றும் பல விடயங்களையும் வளவாளர்கள் தெளிவூட்டினரர்
இரண்டாவது அமர்வில்
கிழக்கு இலங்கையின் தொன்மமும் இலக்கியமும் எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் அப்துல் றஸாக் ஆற்றிய யிருந்தார்
இலங்கையின் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான மாறுபட்ட பல தனித்துவம்கள் உள்ளன அதனை தொட்டதனான விளக்க உரையும் அமையப்பெற்ற
01.கலையும் இலக்கியமும் அதன் பயன்பாடு என்ன என்பதனை பற்றிய விளக்கமும்
02. கலையும் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று சிந்திக்க ஆரம்பிக்கின்றோம்.
03. நமது எண்ணத்தில் தோன்றுவதைகளை முதலில் ஒரு பதிவு செய்து எழுதி வைத்தல்
4. மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள வேறுபாடுகள்
5. நாட்டார் பாடல் இயல்பு மரபுகள் தொடர்பாக தொடர்பான விடையங்கள்
6. இணைய வழி சார்ந்த செயற்பாடுகளில் எழுத்து வடிவத்தில் எவ்வாறு தாக்கம் செய்கிறது
7. ஒப்பீடுகள் மூலம் மாற்றம் தேவை இன்றைய சிந்தனை நவீனத்துவம் பார்வையில் நோக்கி நகர வேண்டும்
8. உதாரணமாக ஒரு நல்ல கவிதைக்குள் ஒரு வெடிகுண்டை வையுங்கள் அது வெடித்து சிதறும் போது அந்த சிதைவுகள் ஒவ்வென்றிலுமிருந்து நல்ல புது வடிவமான கவிதைகள் பிறக்கின்றதே
9.இப்பச்சி பட்டறையில் பல்வேறுபட்ட கருத்தாடல்கள் ஆலோசனைகளும் கலந்து கொண்ட வர்களிடமிருந்து பரிமாற்றம் செய்யப்பட்டது.
இன்றைய நவீன மாற்றத்தின் ஊடாக கட்டுடைப்பு தேவை இன்றைய காலத்தின் புதிய உண்மைகளுக்குள் நாம் நகர வேண்டும்
நாம் எல்லோரும் வாசிப்பு திறனை மேலும் மேம்படுத்துவதுவதன் அவசியத்தினை பற்றியும் வளவாளர் தெளிவூட்டினார்
செயல்முறை பயிற்சிகள் மூண்றாவது அமர்வில் இடம்பெற்றிருந்தது.
0 comments :
Post a Comment