தென்கிழக்கு பல்கலைகழகத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் ஆரம்பமும்; 2025 முதல்நாள் வேலைகளை துவக்கும் சத்திய பிரமாணமும்!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2025 முதல்நாள் வேலைகளை துவக்கும் சத்திய பிரமாணமும் “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ நௌபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பதில் உபவேந்தர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

பொதுநிர்வாக அமைச்சின் 22/2024 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பங்குகொண்ட தேசிய நிகழ்வுகளுடன் ஒன்றினைந்தவாறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

“க்ளீன் ஶ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் தேசிய விழா அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்பப்பட்டிருந்தது குறித்த ஒளிபரப்பை பார்ப்பதற்க்கு பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய நிகழ்வுக்கு அமைய, தூய்மையான இலங்கை உறுதிமொழியை ஊழியர்கள் அனைவரும் வாசித்து, சத்தியம் செய்து குறித்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டனர்.

நிகழ்வின்போது பீடாதிபதிகள், சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், நூலகர், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பதில் நிதியாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.





































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :