கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் அரச கடமைகளை ஆரம்பம் செய்யும் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று புதன்கிழமை (01) காலை 8.30 மணிக்கு திணைக்கள வளாகத்தில் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, தேசிய நலன், அபிவிருத்தி, முன்மாதிரியாகச் செயற்படல் மற்றும் கூட்டுப் பொறுப்பு என்பனவற்றினூடாக மாற்றத்தை ஏற்படுத்தல் என்ற நோக்கத்தினை மையப்படுத்தி இந்த கடமை ஆரம்ப நாள் நிகழ்வு அமையப் பெற்றது.
மேலும் இந்நிகழ்வில், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்காகவும் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக க்ளீன் சிறி லங்கா வேலை திட்டத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதுடன் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில், இந்து மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உட்பட அனைத்துத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment