தென்கிழக்கு பல்கலைகழகத்தில் 2025 புதுவருட ஒன்று கூடலுடன் சேவை நலன் பாராட்டு விழாவும்



தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தா்களின் புதுவருட ஒன்று கூடலும், ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றத்தில் சென்ற சக ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் 07.01.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் அமைந்துள்ள தனியார் தோட்டத்தில் இடம்பெற்றது.

நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டு குழுவின் சார்பில் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எல்.எம். பைரோஜி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி எம்.எச். ஹாறுன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி மற்றும் உதவிப் பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஆகியோரும் விஷேட அதிதிகளாக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம்.எம். முனாஸ், செயலாளர் எம்.எம்.எம். காமில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள ஏ. றசூல் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடத்தில் நீண்டகாலம் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற எம்.வை அமீர் ஆகியோர் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் மதியபோசனமும் உண்டு மகிழ்ந்தனர்.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :