சம்மாந்துறையில் அனுபவம் வாய்ந்த கல்வி நிறுவனமான சிலைடா பாலர் பாடசாலை தனது 35ஆவது ஆண்டு நிறைவு விழாவை பாடசாலையின் ஆசிரியர் ஏ.ஜஹிறா அவர்களின் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (17) சம்மாந்துறை சிலைடா பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் மாணவர்களை கல்வியால் வளப்படுத்திய ஆசிரியர்களுக்கு கௌரவ நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை சுவீஸ் கோல் ஹவுஸ் பணிப்பாளர் ஏ.எம். இஸ்ஹாக் மற்றும் சுவீஸ் ஜுவல்ஸ் பணிப்பாளர் ஏ.எம். இஸ்பாக், சம்மாந்துறை அல் முனீர் அதிபர் ஏ. ரஹீம், சமூக சிப்பிகள் நிறுவனத்தின் கள உத்தியோகத்தர் எம்.எச்.எம். சியான் சிலைடா பாலர் பாடசாலையின் ஆசிரியர் ஏ.கே. றுக்ஸானா, ஏ. நுஸ்றத்பாணு என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment