37 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் பிரதம பொலிஸ் பரிசோதகர் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எல். றபீக்
ரபீக் இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் மறைந்த தலைவர் எம்..எச்.எம். அஷ்ரப் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியிருந்தார் அன்று அஸ்ரப்பின் ஹெலிக்காப்டரில் ஏறியபோது ஊடகவியலாளர் ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளதால் ரபீக்கை அஷ்ரப் இறக்கி நீங்கள் எனது காரை எடுத்துக் கொண்டு அம்பாறை இறக்காமம் வாருங்கள் என்று சொல்லி அவரை ஹெலியில் இருந்து இறக்கியிருக்கிறார். அன்று அவர் ஹெலியில் ஏறியிருந்தால் இன்று இந்த அழகிய 2 பெண் குழந்தைகளுக்கு அவரது மனைவிக்கும் நல்ல ஒர் பொலிஸ் அதிகாரி அன்றே இவர்கள் இழந்திருப்பார்கள்.
ஆகவே தான் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரபீக் இந்த உலகில் ஓர் சிறந்த லக்கி அதிர்ஷ்டசாலி எனக் கூறுகிறேன் என்றார் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன. தெரிவித்தார்
தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்
நான் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக அம்பாறையில் கடமையாற்றிய போது எனக்கு தனிப்பட்ட உதவியாளராக சிறப்பாக கடமையாற்றினார்.
அத்துடன் அம்பாறையில் நடைபெற்ற தயட்ட குருல்ல அரச நிகழ்ச்சி பொறுப்பதிகாரியாக இருந்து திறம்பட செயல் ஆற்றினார் . அதன் பின்னர் அவரை நான் ஒலிவில் உள்ள பல்கலைக்கழகத்தின் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமித்தேன். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளை மிக விரிவாகவும் சாதுரியமாகவும் கையாண்டார் . அவர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றத் தடுப்பு மற்றும் பல்வேறு பதவிகள் வகித்து தமது கடமையை ஓர் சிறந்த பொலிஸ் அதிகாரியாக அவர் சேவையாற்றிய நான் பாராட்டி மேடையில் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி வைத்தார்.
கல்முனை பொலிஸ் நிலைய பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணியாற்றிய நிந்தவூர் சேர்ந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் எம் எல் றபீக் தனது 37 வருட பொலிஸ் சேவையில் இருந்து 12.01.2025 முதல் ஓய்வு பெறுகிறார்.
கல்முனை பொலிஸ் நிலைய பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணியாற்றிய நிந்தவூர் சேர்ந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் எம் எல் றபீக் தனது 37 வருட பொலிஸ் சேவையில் இருந்து 12.01.2025 முதல் ஓய்வு பெறுகிறார்.
இவரது சேவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் 12.01.2025 ல் நடைபெற்றது.
சாய்ந்தமருது வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சேவை நலன் பாராட்டு வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி கே. அஜித் ரோஹன கௌரவ அதிதிகளாக அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.கே. பண்டார , அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் -1 சேனாரத்ன ஆகியோர்கள் அல்ஹிலால் பாடசாலை அதிபர் எம்.நசார், சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிச் சங்க உறுப்பினர்கள் உலமாக்கள் வர்த்தகள் என பலர் கலந்து கொண்டனர்.
பொலிஸ் சேவையில் இணைந்து சுமார் 37 வருடங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பணியாற்றி பல பதவி உயர்வுகளையும் பெற்று இறுதியாக கல்முனை பொலிஸ் நிலைய பதில் தலைமை பொலிஸ் பரிசோதகர் பணியாற்றி மீரா லெப்பை றபீக், 1988 ஏப்ரல் 10 ஆம் திகதி உப பொலிஸ் உத்தியோகத்தர் சென்றல் கேம்ப் பொலிஸ் நிலையத்தில் தனது பணியை ஆரம்பித்தார்
பின்னர் கொழும்பு கிருலப்பனை , கொள்ளுப்பிட்டி. களனி அம்பாறை , கல்முனை ஒழுவில் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் தனது பணியை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்த இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரபுக்கும் 6 வருடங்களின் பின்னர் அவரது மனைவி பேரியல் அஷ்ரப் அவர்கள் அமைச்சராக இருந்தபோது அவருக்கு பிரதம பாதுகாப்பு அதிகாரியாகவும் 10 வருடங்கள் இருந்து மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் ரபீக்.
அவர் நிந்தவுர் பள்ளிவாசல் தலைவராகவும் நிந்தவுர் விளையாட்டுக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அவர் ஒர் சிறந்த சீரான பொலிஸ் அதிகாரியாக இவரை பிரதேச மக்கள் அங்கீகரிகத்துள்ளனர்
இவரது சேவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி அஜித் ரோஹன,
ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எல். றபீக் POLICE என்ற சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் பிரதிபலிக்கும் வார்த்தைகளுக்கு ஒப்ப செயற்பட்ட ஓர் சிறந்த அதிகாரி என்றார்.
ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எல். ரபீக், அவரது சேவை காலத்தில் மிகுந்த நேர்மையாகவும் பொதுமக்களும் மிகுந்த அன்னியோன்யமாக பழகுபவராகவும் இருந்தார். அத்துடன் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் பக்கச்சார்பற்ற முறையில் அவர் எடுத்துக்கொண்ட வழிமுறைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது ரபீக் அவர்களின் சேவையை பாராட்டி அதிகாரிகளாலும் பொது மக்களாலும் பொன்னாடை போர்த்தி ஞாபக சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
நிகழ்வின்போது பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ரபீக் அவர்களின் குடும்ப உறவினர்கள், சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர், வர்த்தகர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment