தனி ஒருவரின் மகத்தான மனிதாபிமான பணி! 50 லட்ச ரூபாய் செலவில் 2000 பேருக்கு உலர் உணவு பொதிகள்! தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் சசிகுமாரின் சேவை!!


வி.ரி.சகாதேவராஜா-
னி ஒருவர் 50 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட2000 பேருக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

இம் மனிதாபிமான பணி அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

திருக்கோவிலைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் என்பவர் இந்த மனிதாபிமான பணியை செய்திருக்கின்றார்.
இந்நிகழ்வில் திருக்கோவில் 500 பொதிகள் , தம்பிலுவில் 500 பொதிகள் , தம்பட்டை 100 பொதிகள், வினாயகபுரம் 500 பொதிகள், தாண்டியடி150 பொதிகள், தங்கவேலாயுதபுரம் 100 பொதிகள், சாகாமம் 50 பொதிகள், சின்னதோட்டம் 150 பொதிகள் வழங்கப்பட்டன.

பரோபகாரி பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மலேசியா விஜயத்தில் இருந்தபோதிலும் அவரது தொண்டர் அணியினர் இதனை தயார் செய்து பொது மக்களுக்கு நேற்றும், நேற்றுமுன்தினமும் கொட்டும் மழைக்கு மத்தியில் சென்று வழங்கி வைத்தனர்.

அவர் அங்கு வராமலே தொண்டர்கள் உரிய வேளையில் மக்களுக்கு பகிர்ந்தளித்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.குணபாலன் தேவையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்.
இதற்கு முன்னரும் பெருவெள்ளத்தின் பொழுது வாகரையிலிருந்து தாண்டியடி வரைக்குமான பகுதிகளில் இவ்வாறான மனிதாபிமான உதவிகளை அவர் செய்து வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :