தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன நல்லுறவை வலியுறுத்தி தைப்பொங்கல் கொண்டாட்டம்!



ல்லா சமூகங்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவரவரது சமய கொண்டாட்டங்களில் பங்குகொண்டு எல்லோரும் எல்லோருடனும் கூடி கொண்டாடி; இன ஒற்றுமைக்கு துணைபோகும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைய உலகெங்குமுள்ள இந்துக்கள் கொண்டாடும் தைப்பொங்கல் கொண்டாட்டம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்க தலைவர் சி. எம். அஹமட் முனாஸ் தலைமையில் 2025.01.16 ஆம் திகதி ஊழியர் சங்க அலுவலக முற்றலில் இடம்பெற்றது.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பல்கலைக்கழக இந்து ஊழியர்கள் மற்றும் ஏனைய சமயங்களைச் சார்ந்த ஊழியர்கள் பங்குகொண்டிருந்த இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் நூலகர் எம்.எம். றிபாவுடீன் ஆகியோரும் பங்குகொண்டதுடன் பிரதி பதிவாளர் எஸ். சிவக்குமார், விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபார், பொறியியலாளர், ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகம்மட் காமில் ஊழியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொடிருன்தனர்.




























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :