கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற 2009ம் ஆண்டு க.பொ.சா/த எழுதிய மற்றும் 2012 ம் ஆண்டு உயர்தரம் எழுதிய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நிந்தவூரில் இடம் பெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக சமய அனுஸ்டானத்துடன் ஆரம்பித்ததுடன் தங்களிற்கு போதித்த மரணமான ஆசிரியர்கள், நண்பர்களுக்காக இரு நிமிட மௌன பிரார்த்தனை செலுத்தப்பட்டதுடன், சிறப்பு அதிதிகளாக அம் மாணவர்கள் கற்ற காலத்தில் தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை பாடசாலையில் பகுதித் தலைவர்களாக இருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் அதிபர் எம். ஐ.ஜாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சாஹிரா பாடசாலையின் தற்போதைய அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்கள் அங்கு உரையாற்றுகையில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு என்றும் தமது பாடசாலைக்கு இன்றியமையாதது என்றார். இன் நிகழ்வில் ஐந்தாவது மேலங்கி அறிமுகமும், அதிதிகளிற்கான நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது மாணவர்கள் சார்பாக ஏ.எம்.எம்.ஹக்கானி அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு(2009/2012)ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா கல்லூரியின் (2025) ஆண்டிற்கான பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.
0 comments :
Post a Comment