மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்


க.கிஷாந்தன்-

லங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு இலங்கையின் சமூக-பொருளாதார தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் இங்கிலாந்தின் வகிபாகம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், மலையக மக்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள், குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் மற்றும் நிர்வாக கட்டமைப்பில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

"எமது சமூகத்தின் மீட்சிக்கு பிரிட்டிஷ் அரசின் கடமையை நாங்கள் நல்லெண்ணத்துடன் நினைவூட்டினோம் என்று மனோ கணேசன் குறிப்பிட்டார்.

நில உரிமைகள், தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவை விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


இச்சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியில் சர்வதேச விவகார மற்றும் தொடர்பாடல் உப தலைவர் பாரத் அருள்சாமியும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :