முதலாம் வருடம் முடிவடைந்து இரண்டாம் வருடம் எனும் புதிய கல்வியாண்டுக்குள் நுழையும் தென்கிழக்குப் பல்கலையின் கலை கலாசார பீட மாணவர்களால் புது வருடத்தை வரவேற்று; அறுசுவை அரங்கம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்களின் வீடுகளில் தயாரிக்கப்பட்ட அறுசுவைப் பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பீடத்தின் விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் வரவழைக்கப்பட்டு; பண்டங்களை சுவைத்து மகிழ வாய்ப்பளிக்கப்பட்டது.
பீடத்தின் அதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் மற்றும் பலரும் கலந்து நிகழ்வை மேலும் மெருகூட்டினர்.
மாணவர்களின் இம்முயற்சி குறித்து பீடாதிபதி பாராட்டியதுடன் புதிய கல்வியாண்டு ஆரம்பித்துள்ள இவ் வருடத்தின் முதல் நாளில் உங்களின் இச்செயல் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமான செயலாகும் என்றும் இந்தக் கல்வியாண்டு பூராகவும் உங்கள் கல்விப்பயணம் இப்பண்டங்களின் இனிய சுவை போன்று இனித்திடட்டும் என்றும் வாழ்த்தினார்.
நிகழ்வின் இறுதியில் மரநடுகையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment