தனியார் மற்றும் அரை அரச துறை ஊழியர்களுக்கான சேவைகளை துரிதமாக வழங்கி வைப்பதற்காக தொழில் அமைச்சினால் புதிய வட்சப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
சலுகை வழங்கல் மற்றும் மத்தியஸ்தம் வகிக்குமாறு கோரி தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் என்பவற்றுக்கு மக்களால் அனுப்பப்படும் கடிதங்கள் தொடர்பில் விரைவாக பதில் வழங்குவதற்காக 0707227877 என்ற இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுமக்களின் நேரம் மற்றும் செலவு என்பவற்றை குறைத்துக்கொள்வதற்கும் உடனடியாக பதில் வழங்கும் செயற்பாட்டை அதிகரிப்பதற்கும் அதிகாரிகளின் நேரத்தை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கும் முடியுமாக இருக்கும் என்று தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment