அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
ம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா , அஸ்ரப் தாஹீர் ஆகியோர் கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

விசேட அதிதிகளாக, நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பொறுப்பாளர் சம்சுல் அலி, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக செயலாளர் எஸ்.எம்.ஆரீப் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அதம்பாவாவினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான விளக்கத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா வழங்கினார்.

இறுதியாக பாதைகள் மற்றும் வெற்று வளவுகளில் உள்ள குப்பை கூழங்கள் அகற்றும் பணியையும் அதிதிகள் தொடக்கி வைத்தனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :