பஸ்களுக்கு மேலதிகமாக பூட்டப்பட்டுள்ள அலங்கார பொருட்களை தடை செய்யகோருவது வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல் என திருகோணமலை மாவட்ட தனியார் பேரூந்து வரையறுக்கப்பட்ட சங்கம் தெரிவித்துள்ளது இது தொடர்பில் இன்று (13) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த சங்கத்தின் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர் மேலும் தெரிவித்த பஸ் உரிமையாளர் ஒருவர் ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் அந்த மேலதிக பொருட்களை தடை செய்யலாம்.
ரூட்டில் வரும் வருமானத்தை விட கையர் மூலமாக கிடைக்கும் வருமானமே அதிகம் வாகனத்தை கையர் பிடிக்கும் போது ஆசன இருக்கை அதன் அலங்காரத்தை பொறுத்தே முன்னுரிமைபடுத்தி அதனை
முன் ஹயர் செய்வார்கள்
முன் ஹயர் செய்வார்கள்
இதனை விடுத்து ஒன்றுமில்லாமல் மரண வீட்டுக்கு செல்வது போன்று இருந்தால் யாரும் ஹயர் பிடிக்கமாட்டார்கள்.
வாகனத்தில் உள்ள வெள்ளிரும்பு தொலைக்காட்சி மின்குமிழ் போன்றன மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் உள்ளதுடன் எமது தொழிலை செய்து கொண்டு செல்கிறோம் இதை விடுத்து அரசாங்கம் மேலதிக பொருட்களை அகற்ற சொல்வதானது எமது வாழ்வாதரமும் அழிக்கப்பகுவதுடன் அலங்கார வெள்ளிரும்பு பொருட்களை விற்பனை செய்பவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்படுகிறது.
இதனால் வருமானமிழந்து காணப்படுகிறது.
0 comments :
Post a Comment