நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து



க.கிஷாந்தன், டி.சந்ரூ-
நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (20.01.2025) இரவு விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து (20) இரவு 8 மணியளவில் ரதெல்ல குறுக்கு வீதியில் நானுஓயா சமர்செட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் அதிவேகமாகச் சென்ற மேற்படி லொறியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வேககட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்து ஏற்பட்டதாகக் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் லொறியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக ரதெல்ல குறுக்கு வீதியில் செல்லும் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :