வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம்



பாறுக் ஷிஹான்-
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட விளம்பர பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சாய்ந்தமருது மாவடிப்பள்ளி காரைதீவு உள்ளிட்ட சில பகுதிகளின் விளம்பர பலகைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

மேற்படி விளம்பர பலகைகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன் தெளிவற்றதாக இடங்களின் பெயர்களும் கடந்த காலங்களில் காணப்பட்டதை ஆர்வலர்கள் சிலரால் சமூக ஊடகங்களில் வெளிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பெயர் பலகைகள் திடிரென அகற்றப்பட்ட போதிலும் தற்காலிகமான எந்தவொரு ஏற்பாடும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் வெளியிடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :