கடந்த 2024 ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் அரசியல் சமூக செயற்பாட்டாளர் ஆதம் எஹ்யா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் வட மேல் மாகாண ஆளுநர் அல்ஹாபில் நசீர் அஹமத் அவர்களினால் காத்தான்குடி பூநொச்சிமுனை மஞ்சந்தொடுவாய் பாலமுனை காங்கேயனோடை போன்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்காக ரூபா 15 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இளைஞர்களின் தேகாரோக்கியம் தலைமைத்துவ பண்பு முன்னேற்றம் மற்றும் சிறார்களின் நவீன கல்வி மேம்பாடு என்பவற்றை கருத்தில் கொண்டு இந் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாலர் பாடசாலைக்கான ஸ்மார்ட் டிவி என்பன புதிய காத்தான்குடி பதுரியா விளையாட்டு கழகம் மற்றும் பதுரியா பாலர் பாடசாலை என்பவற்றுக்கு வழங்கும் நிகழ்வு கடந்த 26.01.2025 ஆம் திகதி பதுரியா பாலர் பாடசாலையில் நடைபெற்றது
இப் பொருட்களை முன்னாள் ஆளுநரின் இணைப்பாளரான ஆதம் எஹ்யா அவர்களினால் நிர்வாகிகளிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் இன்ஷாப் அலி மற்றும் மதுரியா விளையாட்டுக்கழக மற்றும் பாலர் பாடசாலை என்பவற்றின் நிர்வாகிகளும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள்
இப்பொருட்களை பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்த முன்னால் ஆளுநர் அல்ஹாபில் நசீர் அஹமத் மற்றும் இனைப்பாளர் ஆதம் எஹ்யா ஆகியோருக்கும் நிர்வாகிகளினால் நன்றி தெரிவிக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment