மயோன் சமூக சேவை அமைப்பில் அதிகளவான புதிய உறுப்பினர்கள் இணைவு



பாறுக் ஷிஹான்-
யோன் சமூக சேவை அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(10) மாலை கல்முனை மயோன் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவரும் மயோன் குரூப் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.றிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இப்பொது கூட்டத்தின் புதிய நிர்வாகக் கட்டமைப்பும் தலைவரினால் அறிவிக்கப்பட்டது.

அஷ் ஷெய்க் மெளலவி தாசிம் உம்றி கிராத்துடன் ஆரம்பமான இவ் நிகழ்வில் வரவேற்புரை தென் கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப உத்தியோகத்தரும் அமைப்பின் ஆலோசகருமான றம்ஸானால் நிழத்தப்பட்டது. நன்றியுரை அமைப்பின் ஆலோசகர் மாஹிர் ஆசிரியர் நிகழ்த்தினார்.நிகழ்வின் முக்கிய அம்சமான சத்தியப்பிரமாணம் பிரதி செயலாளர் முஹம்மது பஸ்மிர் மேற்கொண்டதுடன் முஹம்மட் றொஸான் நிகழ்வை சிறப்பாக நெறிப்படுத்தி இருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் 2025 ஆம் ஆண்டுக்கான செயலாளராக சுகைல் ஜமால்தீன் தெரிவு செய்யப்பட்டார்.பிரதிச் செயலாளராக முஹம்மட் பஷ்மீர் பொருளாளராக முகம்மட் நிஃப்ராஸ் ஆகியோர் சபையின் அங்கீகாரத்துடன் அறிவிக்கப்பட்டனர்.புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்களுக்கு நியமனக் கடிதம் மற்றும் அமைப்பின் அடையாள அட்டை ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் எதிர்கால திட்டங்களும் கலந்துரையாடப்பட்டன.

தொடர்ச்சியாக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதற்கான பொறிமுறையும் உருவாக்கப்பட்டது.சுமார் 5 வருட காலமாக அம்பாறை மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல சமூக சேவைகளை செய்து வரும் தொண்டு சார் நிறுவனமாக மயோன் சமூக சேவை திகழ்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :