சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இயங்கிவந்த அல்-குர்ஆன் மத்ரஸா நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக மூடப்பட்டது. அம்மத்ரஸாவை எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை முதல் மீள ஆரம்பம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இம் மத்ரஸாவின் பொறுப்பாளராக தகுதிபெற்ற எஸ். அஜ்மல் மெளலவி கடமையாற்றவுள்ளதாகவும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவர் எம்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
பதிவுக் கட்டணமோ, மாதாந்த கட்டணமோ என எந்தவிதக் கட்டணமும் அறவிடப்படாது முற்றிலும் இலவசமாக இம்மத்ரஸா நடாத்தப்படவுள்ளது.
தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புபவர்கள் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் காரியாலயத்தில் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, அதனைப் பூரணப்படுத்தி, எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment