கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் "கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டம்.



நூருல் ஹுதா உமர்-
லங்கை திரு நாட்டின் நெறிமுறையிலான சுற்றாடல் மற்றும் சமூக மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டின் தரப்படுத்தல் நோக்கங்களை முதன்மையாக கொண்டு “ Clean Srilanka - அழகான நாடு புன்னகைக்கும் மக்கள் ”
எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் 01. ஜனவரி, 2025 ஆம் திகதி கிளீன் லங்கா வேலைத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களினால் பாடசாலை அதிபர்களுக்கு நடாத்தப்பட்ட கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக பாடசாலை மட்டத்திலான இவ் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரி ஸ்மார்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் குடியியற் கல்வி பாட ஆசிரியர், கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளருமான எம்.ஏ. அஸ்வர் அவர்களினால் வேலைத்திட்டம் தொடர்பான அரச கொள்கைகள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் அக் குறிக்கோள்கள், இலக்குகளை அடைவதற்கு மஹ்மூத் ஆசிரியர்கள் பங்களிப்பு பற்றியும் கல்லூரியினால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்திட்டம் மற்றும் சமூக, சுற்றாடல், நெறிமுறைகளில் - Clean Sri Lanka தொடர்பான விளக்கத்தினை ஸ்மார்ட் டிவி தொழினுட்ப உதவியுடன் நிகழ்த்துகை மென்பொருள் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு காட்சிகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி, உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :