மருதமுனை ஜமீல் எழுதிய காலம் ஒரு வேட்டை விலங்கு நூல் வெளியீட்டு விழா



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
கிழக்கிலங்கையின் மருதமுனையை சேர்ந்த ஏ.ஆர். அப்துல் ஜமீல் எழுதிய "காலம் ஒரு வேட்டை விலங்கு" கவிதை தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மர்ஹூம் அப்துல் றஸாக் சேர் நினைவரங்கில் புதுப் புனைவு பதிப்பகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த வெளியீட்டு விழா நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் கலாநிதி பிர்தௌஸ் சத்தார் தலைமையில் ஓய்வு நிலை பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ. காதர் முன்னிலை அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எம்.ஹிபத்துல் கரீம், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.நுபைல், கிழக்கு பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் எம். எப். மர்சூக் , தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பைறோஸ், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இலங்கை நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரி கவிஞர் எம்.எம். நெளபல், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வெளியீட்டு விழா நிகழ்வின் முதன்மை பிரதிகளை மருதமுனை ஜாஹி வீவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஐ. உபைதுர் ரஹ்மான், அல்-மனார் மத்திய கல்லூரியின் உதவி அதிபர் எம்.எஸ். நிகால், திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பஹட் ஸமான், மெரீடியன் கபே உரிமையாளர் எம். எச். எம்.நியாஸ் ஆகியோர் பெற்றுக் கொள்ளவுள்ளனர்

மர்ஹூம் அப்துல் றஸாக் சேர் நினைவு பிரதி ஏ.ஆர்.ஹிபத்துல்லாஹ் பெற்றுக் கொள்வார். நூல் மீதான வாசிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர், எழுத்தாளர் அப்துல் றஸாக், கவிஞர் ஜிப்ரி ஹாசன், கவிஞர் டீன் கபூர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்ச்சி நெறியாள்கையை எம்.எம். நாளில் நிகழ்த்துவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :