தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 28 வருடங்களாக பாதுகாப்பு துறையில் கடமையாற்றி பல்கலைக்கழகத்தின் உயர்ந்த பாதுகாப்புக்கும், அதன் வளர்ச்சிக்கும் அதன் உட்கட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழகத்தின் இதர விடயங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அன்பு சகோதரர் ஹாப்தீண் அவர்களின் மரணச் செய்தி கேட்டு எங்களது பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
மர்ஹும் ஹாப்தீன்அவர்கள் எமது பல்கலையில் கடமையாற்றும்
போது இங்குள்ள சகல தரப்பினரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகியவர்களில் முதன்மையானவர் என்றால் அது மிகையாகாது அது மட்டுமல்லாது சமூகம் சார்ந்த நலன் விடயங்களிலும் அவருடைய
சேவை இங்கு நினைவு கூறப்பட வேண்டியது.
தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் இங்கு கடமை புரிந்த / புரிகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் பல சிரமங்களையும் , தியாகங்களையும் கஷ்டங்களையும் எதிர் நோக்கியவர்கள் ஏன் என்றால் இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட இடம் ஒரு அடர்ந்த காடகவும் , காட்டுப்பன்றிகள் நிறைந்த எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் தான் இவர்கள் இரவு பகலாக கண்முழித்து பாதுகாத்த உத்தமர்கள் இவர்களை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது என்பதை மீண்டும் உரசிப் பார்க்கின்றேன்.
இருந்தாலும் மர்ஹூம் சகோதரர் ஹாப்தீன் அவருடைய நல்ல உயர்ந்த மனதுக்கு அவருடைய மகன் இந்த பல்கலைகழகத்தில் இங்கு ஒரு தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமை புரிவது எங்களுக்கு ஒரு மன ஆறுதலாக இருக்கின்றது.
அண்ணாருடைய இழப்பில் துயர் உற்றிருக்கும் அவரது மனைவி , பிள்ளைகள் , குடும்ப உறவினர்கள் , பல்கலைக்கழக நண்பர்கள் அனைவருக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
முனாஸ் முகைடீன்
தலைவர்
ஊழியர் சங்கம்
SEUSL
0 comments :
Post a Comment