காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

பாறுக் ஷிஹான்-

கா
ட்டு யானையொன்று பிரதான வீதி ஓரத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று இன்று(17) காலை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :