அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் மேலோங்கி யிருப்பதால் மாவடிப்பள்ளி பெரிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பிரயாணிகள் அவலங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் பெரிய பாலம் தொடக்கம் மாவடிப்பள்ளி சியாரம் வரையில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் இரண்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒளிந்த பின் மீண்டும் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒளிராமல் பல சிரமங்களை ஏற்படுகிறது.
மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவது மட்டுமே இல்லாமல் பாம்பு, முதலை,ஆமை போன்ற தொல்லைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும்
இந்த வீதியின் மின்விளக்கு தொடர்ந்தும் ஒளிர்வதற்கு புணரமைப்புச் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமானதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment