காட்டுத் தீயும், இறைவனின் அத்தாட்சியும், காசாவில் போர் நிறுத்தமும்.



மெரிக்காவில் ஏற்பட்டதனை சாதாரண காட்டுத்தீ என்று கடந்துவிட முடியாது. இதில் கடவுளின் அத்தாட்சி உள்ளதென்பது நன்றாக தெரிகிறது. தான் பதவியினை ஏற்றதும் காசாவுக்கு நரகத்தை காட்டுவேன் என்று எச்சரித்தவர் பதவி ஏற்பதற்கு முன்பே அவரது தின்னையில் நரகம் காண்பிக்கப்படுகிறது.

நெருப்புக் கிடங்கில் வீசப்பட்ட இப்ராஹீம் நபிக்கு குளிர்ச்சியை வழங்கிய அதே இறைவன் உலக நாடுகளிலிருந்து திருடப்பட்ட அமெரிக்கர்களின் செல்வங்களை நெருப்பினால் எரித்து சாம்பலாக்குவது இறைவனின் தண்டனையா அல்லது எச்சரிக்கையா என்று கூறுவதற்கு போதிய அறிவு என்னிடமில்லை.

மனித வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வரம்பு மீறிய அந்தந்த சமுதாயத்தினர்களுக்கு வெவ்வேறுவிதமான தண்டனைகளை இறைவன் வழங்கியுள்ளான்.

அந்தவகையில் நூஹ் நபியை பொய்யர் என்று அவரை மறுத்த அவரது சமுதாயத்தினர்களை இறைவன் மழையை பொழியச்செய்து அழித்தான் அந்த மக்களுக்காக எவரும் அனுதாபப்படவில்லை.

அதுபோல் கல் மழை பொழியச்செய்து லூத் நபியின் சமுதாயத்தினரை இறைவன் அழித்தான். அப்போது அந்த சமுதாயத்துக்காக எவரும் பரிதாபப்படவில்லை.

கடலை பிளந்து மூஸா நபியின் சமுதாயத்தினர்களை காப்பாற்றிய இறைவன், பிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும், அவர்கள் ஓட்டிவந்த குதிரைகளையும் அதே கடலுக்குள் மூழ்கடிக்கச் செய்தான். குதிரைகளுக்காக எவரும் கவலைப்படவில்லை.

கஹ்பாவை உடைப்பதற்கு ஏமனிலிருந்து ஆப்ரஹா மன்னனின் தலைமையில் பெரும் யானைப் படை மக்காவுக்குள் நுழைந்தபோது சிறு பறவைக்கூட்டம் சிறு சிறு கற்களை வீசியதனால் அந்த படையுடன் யானைகளும் அழிந்தன. ஆனால் யானைகளுக்காக எவரு அனுதாபப்படவில்லை.

இன்று கலிபோர்னியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களை தீயிட்டு அழிப்பது பாலஸ்தீன போராளிகளோ, அல்-கொய்தா தீவிரவாதிகளோ அல்ல. அது இறைவணினால் நெருப்பைக்கொண்டு பாவிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகின்ற அத்தாட்சியாகும்.

அமெரிக்கா உலகின் பல பகுதிகளில் குண்டுகளை மழையாக பொழிந்து அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்தபோது, அந்த அப்பாவி குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும், முதியவர்களுக்காகவும் அனுதாபப்படாத நிலையில், தற்போது நெருப்பைக்கொண்டு இறைவன் காண்பிக்கின்ற அத்தாட்சிக்காக நங்கள் அனுதாபப்பட முடியாது.

இது சாதாரண காட்டுத் தீயல்ல மாறாக இறைவனின் தண்டனை என்று சந்தேகமின்றி நம்பியதனால்தான் டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய எச்சரிக்கைக்கு பணிந்து நெதன்யாகு காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளார். காட்டுத்தீ அமெரிக்காவை சுட்டெரிக்காமல் விட்டிருந்தால் இந்த சமாதானம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக சமாதானம் பேசிப் பேசியே காசா மக்கள் மீது இன்னும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :