தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால்தான் தமது உரிமைகளை வெண்றெடுக்க முடியும் என்று அசையா நம்பிக்கை கொண்ட அன்னார் Covi 19 இல் மரணித்த முஸ்லிங்களது ஜனாசாக்கள் வலுக்கட்டாயமாக வஞ்சகமான முறையில் எரிக்கப்பட்ட போது முஸ்லிம் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனிகளாக இருந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாகவும் ஜனாசா எரிப்பிற்கு எதிராகவும் ஓங்கி குரல் கொடுத்தார் என்பதுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பாராளுமன்றத்திலும் குரல் கொடுக்க வைத்ததை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
தமிழ் பேசும் மக்களிற்கும் நாட்டிற்கும் விசுவாசமான முறையில் சேவையாற்றிய தலைவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு இலங்கையின் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு பேரிழப்பாகும். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை எஸ். சேனாதிராஜா அவர்கள் தனது கட்சியின் கொள்கைகளை பற்றுறுதியுடன் முன்னெடுத்து உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் குரலாக செயற்பட்டு அம்மக்களுக்கு நியாயமான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று தனது இறுதி மூச்சு வரை பயணித்த உன்னத தலைவரின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை மக்கள் அனைவரும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் மறைவால் துயறுற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
0 comments :
Post a Comment