மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் மரணித்த மத்ரஸா மாணவர்களது விபத்தினை தடுப்பதற்கு முன்னாயத்தம் மற்றும் சட்டக்கடமையை முறையாக மேற்கொள்ளாத அரச அதிகாரிகளுக்கு எதிராக,தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரீ. கருணாகரன் முன்னிலையில் இந்த வழக்கு அழைக்கப்பட்டது.
மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற கோர அனர்த்தத்தின் போது தகுவாய்ந்த அதிகாரிகள் இவ்வனர்த்தத்தினை தடுக்க சட்ட ரீதியில் தத்துவமிருந்தும் அதற்கு தேவையான கருமங்களை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உழவு இயந்திரம் தடம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவரது சார்பாக தரப்பினர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இந்நிலையில் வழக்கின் முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தினால் பரீட்சிக்கப்பட்டு அவர்களுடைய சாட்சியம் சட்டத்தரணிகளால் நெறிப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கினை விசாரிப்பதற்காக இவ்விடயம் தொடர்பாக மன்றில் முறைப்பாட்டாளர் சார்பாக அக்கரைப்பற்று சட்டத்தரணி சப்ராஸ் ஷரீபுடன் சட்டத்தரணி குபேந்திரராஜா ஜெகசுதன், சட்டத்தரணி எம்.எம்.எம்.ஏ. சுயாயிர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
0 comments :
Post a Comment