கண்டி மயிலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி - மூவர் பலத்த காயம்




க.கிஷாந்தன்-
லாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து 20.01.2025 இடம்பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து மாரக்ஷன உடுதெனிய பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், மயிலப்பிட்டி பகுதியிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பஸ் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் 18 வயது மதிக்கதக்க மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, தந்தை மற்றும் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ரிகலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேற்படி உயிரிழந்த யுவதியின் சடலம் மாரஸ்ஸன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே எதிரே வந்த பஸ்சுடன் மோதியதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
எனினும் இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பஸ் சாரதியை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :