கிட்டங்கி வீதி போக்குவரத்து தடை! தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்வதால் இன்று (20 திங்கட்கிழமை )போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது .
கல்முனை சேனைக்குடியிருப்பு , நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இன்று ( திங்கட்கிழமை)காலை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மூடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவ்வழியே பயணம் செய்கின்ற அரச மற்றும் தனியார் அதிகாரிகள், மாணவர்கள் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் வெள்ளம் மீண்டும் பரவலாக ஏற்பட்டுள்ளது.
பல வீதிகளின் குறுக்காக வெள்ள நீர் பாய்கிறது. கிட்டங்கி பாலத்தை ஊடறுத்து நீர் பாய்வதால் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக இந்த வீதி காணப்படுவதால். பொலிஸாரால் இந்த வீதி மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ள காலத்தில் இடம் பெற்ற உயிரிழப்பு சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதில் பாதுகாப்பு படை கவனம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :