அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதியாக ஜுனைட் நியமனம்



வி.ரி.சகாதேவராஜா-
ட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் 06 வது பீடாதிபதியாக எம்.சி.ஜூனைட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது புதிய பீடாதிபதியாக எம்.சி. ஜூனையிட் முன்னாள் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் (28) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கான உப பீடாதிபதியாக கடமையாற்றியதுடன், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியாகவும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாள் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :