அதன் பின்பு 1950 இல் இருந்து ஆரம்பமான கொரியா யுத்தம், 1955 – 1975 வியட்நாம் போர் அத்துடன் 1980, 1990 காலங்களில் சோமாலியா மற்றும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் கொல்லப்பட்டும், காணாமல் போனவர்கள் என மொத்தமாக பல மில்லியன்கள் ஆகும்.
1999 இல் இருந்து யூகோஸ்லாவியாவில் நேட்டோ என்ற போர்வையில் அமெரிக்கா 15,000 தடவைகள் நடாத்திய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம்.
ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டுவதற்காக நடாத்திய கொலையாட்டம் மற்றும் சவூதி அரேபியாவுடன் இணைந்து யேமனில் நடாத்திய விமானக் கொலையாட்டம் என மொத்தமாக கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மில்லியனை தாண்டும்.
இதில் நேரடி கொலையாட்டம் ஒருபுறமிருக்க, இஸ்ரேல் போன்ற தனது கூலிப்படைகளுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி அவர்கள் மூலமாக உலகின் பல பாகங்களிலும் நடாத்தப்பட்ட கொலைகள் ஏராளம்.
அந்தவகையில் 1948 தொடக்கம் இன்று வரைக்கும் பாலஸ்தீனில் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் ஆகும்.
பொருளாதார இழப்புக்கள் பற்றி எதுவும் இங்கே குறிப்பிடவில்லை. மேலும், 1945 க்கு பின்பு இடம்பெற்ற சம்பவங்களை மாத்திரமே மேலோட்டமாக கூறியுள்ளேன். 1945 க்கு முன்பு நடந்தவை பற்றி எழுதினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும். இவைகள் அனைத்தையும் விரிவாக எழுதினால் நீங்கள் வாசிக்கமாட்டீர்கள். அத்துடன் எனது முகநூல் முடக்கப்படலாம்.
உலகில் உள்ள வளங்களை சூறையாடி மற்றும் நாட்டுத் தலைவர்களை மிரட்டி, மிரட்டலுக்கு பணியாதவர்களை கொலை செய்து அல்லது ஆட்சியை கவிழ்த்து, கோடிக்கணக்கான மக்களை கொலை செய்த அராஜகவாதிகள் தற்போது உலகிற்கு ஜனநாயகம் போதித்துக்கொண்டு பாதுகாப்பான புவி அமைவிடத்தில் அமெரிக்க மக்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள்.
இவர்களை பழிவாங்குவதற்கு யாரும் நெருங்கமுடியாத நிலையில் லோஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் இயற்கையினால் ஏற்பட்ட தீ அனர்த்தமானது அவர்கள் செய்த அட்டூழியங்களில் ஒரு வீதமும் சமனாகாது. இந்த நிலையில் இங்குள்ள சில அப்பாவிகள் அவர்களுக்காக அனுதாபப்படுவதனை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. இவர்களை என்னவென்று கூறுவது ?
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment