மஹ்மூத் சாதாரண தர பிரிவின் பெறுபேறுகளை மேம்படுத்தல் செயற்திட்டங்கள் ஆரம்பம்.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) க.பொ.த (ச/த) - 2024 தொகுதி மாணவிகளின் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில் பாட ரீதியிலான கருத்தரங்குகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அப்பிரிவின் பகுதித்தலைவர் ஏ.ஆர்.எம். நளீம் தலைமையில் திங்கட்கிழமை சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) கலந்து கொண்டு மாணவிகளுக்கு சிறந்த அறிவுரை, ஆலோசனைகளையும் வழங்கினார். பாட ரீதியிலான கருத்தரங்குகள் கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர்களின் வழிகாட்டல்களில் பல்லூட எறிவை (Multimedia) தொழில்நுட்ப உதவிகளுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இப்பாடசாலையில் இருந்து 26 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :