இரண்டாம் மொழி கற்கை நெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) சம்மாந்துறை பிரதேச சபையிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை(20) பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரண்டாம் மொழி வளவாளர் என்.எம். புவாட் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (நிலட்) கல்வி மற்றும் ஆய்வு அதிகாரி திருமதி.பாலரஞ்சனி காந்தீபன், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (நிலட்) கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. கல்யாணி, சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.சுல்பா, இரண்டாம் மொழி பாட வளவாளர் கே.பீ.பிரதீப் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.

2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறி என்பது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :