இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட விமானப்படை கட்டளையிடும் அதிகாரி டி.எஸ்.எம்.எல்.கே. சுகததாச மற்றும் கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபர் ஐ. உபைதுல்லா மற்றும் பல வைத்தியர்கள் சட்டத்தரணிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.
தனது இருபதாவது வருடத்தை பாடசாலை பூர்த்தி செய்வதனால் அதன் ஞாபகார்த்தமாக 2025 ம் ஆண்டிற்கான கலண்டர் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு ஏராளமான நினைவுச் சின்னங்களும் அதிதிகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் தங்களது யுகேஜி கல்வி நடவடிக்கையை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையில் இடம் பெற்ற பல்வேறு வகையான போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றி வெற்றியிட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வின்போது பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment