கல்முனை மஹ்மூத் ம௧ளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனை - 14 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள சாஹிரா௧்௧ல்லூரி வீதியில் பாடசாலையினை அண்டிய பகுதியில் கல்லூரி ஆரம்பி௧்கும் வேளையிலும் விடு௧ை நேரத்திலும் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த வெள்ளிக்கிழமை, 2025.01.17 முதல் பல நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதில் பாடசாலை விடுகை நேரத்தில் மோட்டார் சைக்கிள் தவிர்ந்த அனைத்து வாகனங்களும் மைதானத்தின் வழியே உள்ளே வந்து மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் மோட்டார் சைக்கிள் மாத்திரம் பாடசாலையின் முன் பக்கம் A Gate (சாஹிரா கல்லூரி வீதி ) வந்து மாணவிகளை அழைத்துச் செல்லவேண்டும், அதேபோல் மைதானத்தின் பக்கம் நடந்து செல்லும் மாணவிகள் C Gate (சிறிய வழி பாதை) ஊடாக வரிசையாக செல்ல வேண்டும், எந்த ஒரு மாணவிகளும் வாகனம் வரும் வரை பாதை ஓரத்தில் நிற்காமல், பாடசாலை வளாகத்தினுள் நிற்க வேண்டும், மைதானத்தின் பக்கம், வாகனத்தில் செல்லும் மாணவிகள் தரம் 9 கட்டிடத்தின் கீழ் வாகனம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறைகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வாகன நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கு கிழக்கு திசையில் அமைந்துள்ள "C" Gate விரிவுபடுத்தப்பட்டு மேற்கு திசையில் அமைந்துள்ள "B" Gate ஏதிராக (B to C Gate) ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற் குறிப்பிடப்பட்ட போக்குவரத்து விதி முறைகள் மாணவிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை போக்கும் நோக்கில் "மஹ்மூத் - Clean Srilanka" வேலைத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இத் திட்டத்திக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து வாகன உரிமையாளர்களிடம் பாடசாலை சமூகம் வேண்டிக்கொள்கின்றது என கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment