கல்முனை பிராந்தியத்தில் உள்ள தனியார் மருந்தகங்களின் (Community Pharmacy) தரங்களை மேம்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் மருந்தகங்களின் (Community Pharmacy) உரிமையாளர்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும் " சிறந்த மருந்தகங்களின் செயன்முறை" தொடர்பான செயலமர்வொன்று மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவு அம்பாறை மாவட்ட கரையோர பாமசி உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து குறித்த செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன், சுற்றுச்சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத், பிராந்திய மருந்தாளர் திருமதி எஸ்.இந்திரகுமார், உணவு, மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிராந்திய பணிப்பாளர் சகீலா இஸ்ஸதீன், சுற்றுச்சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் ஆகியோர் தனியார் மருந்தகங்கள் (Community Pharmacy) கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், அது தொடர்பான சட்ட திட்டங்கள் பற்றியும் விரிவுரையாற்றினர்.
குறித்த செயலமர்வில் தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment