கல்முனை பிராந்தியத்தில் நிரந்தரமான மின்னொளி விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் அவரின் D-100 திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மூலம் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்திற்கு நிரந்தரமாக மின்னொளி பொருத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியன இணைந்து இவ் வேலை திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது. இவ் வேலைத்திட்டத்தின் பூர்வாங்க வேலைகள் இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக நிறைவடைந்து மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும்.
இவ் செயற்திட்டத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உதைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் மென்பந்து கிரிக்கெட் வீரர்கள் அதிகம் பயனடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment