காத்தான்குடி First Roots சர்வதேச பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டிற்கான விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மாணவி மாணவர்கள் வெளியேறும் விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் First Roots சர்வதேச பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி பா. ஸி. மு. அறபாத் தலைமையில் இடம் பெற்றது
பிரம்மிக்க வைக்கும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக கோட்ட கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹக்கீம் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதிகளாக பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகளால் மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது, மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் முன்பள்ளி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment